த்ரிஷாவின் ‘மோகினி’ பிப்ரவரியில் ரிலீஸ்..!

210

mohini

கடந்த வருடம் அதிக படங்களில் அதாவது சதுரங்க வேட்டை-2, மோகினி, 96, 1818, கர்ஜனை, ஹே ஜூடு என 6 படங்களில் நடித்து வந்தார் த்ரிஷா. ஆனாலும் சோகம் என்னவெனில் அவர் நடித்த ஒரு படம் கூட ரிலீசாகவில்லை என்பதுதான். ஆனால் இந்தவருடம் நிச்சயமாக த்ரிஷாவின் வருடமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..

அந்தவகையில் மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ‘மோகினி’ படம் இந்த வருடத்தில் அவரது முதல் படமாக வெளியாக இருக்கிறது. இந்தப்படம் குறித்து இயக்குனர் மாதேஷ் கூறும்போது, “இப்படத்தில் த்ரிஷா சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. இது ஹாரர் பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. இப்படம் உன்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது” என்றார்.

‘மோகினி’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.​லக்ஷ்மன் குமார் கூறும்போது, “மோகினி திரைப்படம் பிப்ரவரியில் படம் வெளியாகும். மோகினி படத்தின் கதையை மாதேஷ் சார் என்னிடம் கூறும்போது போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வழக்கம்போல ஒரு வீட்டினுள் அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் கதைகளம் கிடையாது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் விசுவல் எபெக்ட்ஸ் மிக அருமையாக வந்துள்ளது படத்தின் கதையை என்னிடம் கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது” என்றார்

Comments are closed.