‘கீ’ பட ரிலீசுக்காக விஷால் செய்த தியாகம்…!

241

kee vishal

ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கீ’.. நாடோடிகள் என்கிற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்த, அதேசமயம் சிம்புவை வைத்து படம் தயாரித்து நட்டமடைந்த மைக்கேல் ராயப்பன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். இந்த விழாவில் கலந்துகொண்ட விஷால் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்..

“கீ’ பட இயக்குநர் காலீஸ் ட்ரெய்லரை படப்பிடிப்புக்கு இடையே காட்டினார். அருமையாக இருந்தது. வருங்காலத்தில் நம்பிக்கைக்குரிய இயக்குநராக வருவார். ஜீவாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். இப்படம் சரியான முறையில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நிறைய பேர் விஷால் இந்த தயாரிப்பாளருக்கு நல்லது செய்ய வேன்டும் என பேசினார்கள். எனது ‘இரும்புத்திரை’ திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளிவராது. ஏனென்றால் அதே தேதியில் இப்படம் வெளியாகவுள்ளது. மற்றொரு நல்ல தேதியில் எனது படத்தை வெளியிட்டுக் கொள்கிறேன்.

மைக்கேல் ராயப்பன் சார் தனது முந்தைய படத்தால் நஷ்டமடைந்தார். இதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளையும் சந்தித்தார். இங்கு தேனப்பன் சார் பேசியது உண்மைதான். அவர் புகார் அளித்தது உண்மைதான். ஆனால் சிம்பு தரப்பிலிருந்து எந்தவொரு ரியாக்‌ஷனுமே வரவில்லை. கேள்வி கேட்டு பதில் வரவில்லை என்றால், நான் போய் என்ன சுவற்றிலா முட்ட முடியும். தற்போது மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஆலோசித்து வருகிறோம்.

மைக்கேல் ராயப்பன் சாருடைய நிறுவனத்தில் ஏற்கெனவே ஒரு படம் நடித்திருக்கிறேன். தற்போது மீண்டும் ஒரு படம் செய்யலாம். நீங்களே படக்குழுவினரை ஒருங்கிணையுங்கள். எனக்கு எந்தவொரு பணமும் தர வேண்டாம். படம் நல்லபடியாக முடித்து, வியாபாரம் செய்து முடித்து, அனைத்து நல்லபடியாக முடிந்ததவுடன் எனக்கு ஏதாவது கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன்’ என்றார். விஷால்

நட்டமடைந்த ஒரு தயாரிப்பாளர் மீண்டு(ம்) எழுந்து வருவதற்காக, போட்டிக்கு நின்ற தனது பட ரிலீஸை தள்ளி வைத்ததுடன், அவருக்கு முன்பணம் வாங்கமால் நடித்துக்கொடுக்கவும் முன்வந்த விஷாலின் செயல் பாராட்டுக்குரியது.

Comments are closed.