‘பாகமதி’ பாடல்களை வெளியிட்ட சூர்யா..!

222

தற்போது அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் படம் தான் ‘பாகமதி’.. ஜி.அசோக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்தப்படத்தில் மலையாள நடிகர்கள் உன்னிமுகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். அதனால் மலையாள மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட சூர்யா, பாகமதி படத்தின் பாடல்களை வெளியிட்டார். இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்து வெளியிடுகிறார்.

Comments are closed.