சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் புதிய அலை படங்களை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுவருகிறார்கள், இதற்கு அடிப்படையாக அமைந்த “நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் & இயக்குனர் சிவநேசன் தயாரிப்பில் குறும்பட இயக்குனர் ஶ்ரீசெந்தில் இயக்கியுள்ள படம் ‘காளிதாஸ்’.
பரத் இதில் முதன்முறையாக அவர்களின் முற்றிலும் புதிய தோற்றதில் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார். போலீஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லராக உருவாகியுள்ள இந்த ‘காளிதாஸ்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை, இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜூடன் இணைந்து நடிகர் கார்த்தி வெளியிட்டார்
தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் கண்ணாதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.

Comments are closed.