மலையாளத்தில் ஸ்டார் இயக்குனரானார் ஜித்து ஜோசப்

190

ஹிட், சூப்பர்ஹிட், மெகா ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட்.. இதுதான் மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்பின் ரன் கிராஃப். சுரேஷ்கோபியை வைத்து அவர் இயக்கிய முதல் படம் ஹிட்.. 2010ல் திலீப் நடித்த ‘மை பாஸ்‘ சூப்பர்ஹிட். கடந்த 2013ல் துவக்கத்தில் வெளியான பிருத்விராஜின் ‘மெமோரிஸ்’ மெகா ஹிட் என்றால் வருட இறுதியில் வெளியான மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ பிளாக் பஸ்டர் ஹிட்.

சந்தேகமே இல்லாமல் ஜித்து ஜோசப் ஸ்டார் இயக்குனர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார். வரும் பிப்ரவரியில் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார். பல ஹீரோக்கள் இவர் படத்தில் நடிக்க போட்டிபோட்டாலும் இந்தமுறை அவர் டிக் அடித்திருப்பது மறுபடியும் திலீப்பைத்தான். வெற்றியை சொல்லி அடிக்கும் கில்லிகள் தானே இருவரும்.

Leave A Reply

Your email address will not be published.