ஹேப்பி பர்த்டே ட்டூ ‘மாஸ் மகாராஜ்’…!

206

டோலிவுட்டின் மாஸ் மகாராஜ் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ரவிதேஜா. இன்று முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வரும் ரவிதேஜா கடந்துவந்த பாதை ஒன்றும் பூப்பாதை அல்ல.. முள்பாதை.. ஆரம்ப காலத்தில் சென்னையில்கூட தங்கி, சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார்.

பின்னர் தெலுங்கில் பல படங்களில் துணை நடிகராக நடித்துவந்த இவர் ஒருகட்டத்தில் பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சியிடம் உதவி இயக்குனராக சேர, அங்கிருந்துதான் இவருக்கு சுக்கிர திசை ஆரம்பமானது. கிருஷ்ண வம்சி 1997ல் தான் இயக்கிய ‘சிந்தூரம்’ படத்தில் அவரை ஹீரோவாக்க அதன்பின் தொடர்ந்து ரவிதேஜாவுக்கு ஏறுமுகம்தான்.

பல முன்னணி நடிகர்கள் சந்திக்கக்கூடிய ஏற்ற, இறக்கங்களை ரவிதேஜாவும் சந்தித்தாலும், இன்றும் அவருக்கான மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. குடியரசு தினமான இன்று பிறந்தநாள் காணும் ரவிதேஜாவுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.