மகாபாரத கர்ணனை மையப்படுத்தி, மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’ என்கிற படத்தில் விக்ரம் ‘கர்ணன்’ ஆக நடிக்கவுள்ளார். படம் உருவாக இருக்கிறது. சுமார் 3௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்தப்படத்தை யுனைடெட் பிலிம் கிங்டம் நியூயார்க் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கப்பட்டு வரும் 2019 டிசம்பரில் படம் வெளியாக இருக்கிறது. இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருந்தாலும், முதலில் இந்தியில் தான் இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
முதலில் பிருத்விராஜை வைத்து மலையாளத்தில் இந்த ‘கர்ணன்’ படத்தை தயாரிக்கப்போவதாக கூறினார் இயக்குனர் இதற்கான முறையான அறிவிப்பு கடந்த 2016 ஜனவரியில் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டது.. ஆனால்படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது என்று ‘கர்ணன்’ படம் கைவிடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தான் இந்த கதையில் விக்ரம் நடிப்பதாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.