“மனிதனைவிட மேல்” ; உதயநிதியை ‘நிமிர’ செய்த மனைவியின் பாராட்டு..!

290

nimir 1

கடந்த வருடம் மலையாளத்தில் ரிலீஸான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் ‘நிமிர்’ படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப்படத்தில், நமீதா பிரமோத் கதாநாயகியாக நடிக்க, ஆண்ட்டி ஹீரோவாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இந்தப்படம் தனக்கு ஒரு பிரேக் தரும் என திடமாக நம்புகிறார் உதயநிதி.

“சமீபத்தில் பிரிவியூவில் படத்தை பார்த்த என் மனைவி, உன் கேரியரில் மனிதன் படத்துக்கு பிறகு அதை விட ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறாய், ஆனாலும் ஃபஹத் பாசில் செய்ததில் பாதியை செய்திருக்கிறாய் என சொன்னார். அவர் கொடுத்த இந்த பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தை பார்த்த பலரும் பிரியதர்ஷன் சாரின் சிறந்த படமாக நிமிர் வந்திருக்கிறது என்றார்கள். ஜனவரி 26 ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம்” என்கிறார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்

Comments are closed.