தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக திரையுலக பயணத்தை தொடங்கிய ஆர்.கே.சுரேஷ் தற்போது சில படங்களில் கதாநாயகனாகவும் சில படங்களில் வில்லன் வேடத்தையும் தொடர்ந்து வருகிறார் இதை தொடர்ந்து தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்..
ஆம். குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கும் ‘சிகாரி சாம்பு’ என்கிற படம தான் அது. ஷிவதா நாயர் கதாநாயகியாக நடிக்க, ‘ஆர்டினரி’ புகழ் சுகீத் இந்தப்படத்தை இயக்குகிறார். அதுமட்டுமல்ல தனது நடிப்பில் அடுத்தகட்டமாக இந்தப்படத்தில் அதிரவைக்கும் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். கூடவே இதேபடத்தில் 25 வயது இளைஞராகவும் நடிக்கிறார்.
Comments are closed.