“ரஜினி கையால் விருது வாங்கியதை மறக்க முடியாது” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..!

223

Arish Kumar (5)

புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார்.

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின் மூலம் )அறிமுகம் தான் அரீஷ் குமார்..

இன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் என ஸ்டார் நடிகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கணேஷ்குமாரின் மகன்.

“தற்போது ஒருநல்ல கதையை தேர்வு செய்து ஒப்புக்கொண்டுள்ளேன்.. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இந்தப்படம் நன்றாக முடிந்து, அது ஒரு நல்ல விநியோகஸ்தர் கைகளுக்கு சென்றாலும் கூட, ரிலீஸ் விஷயம் சவாலான ஒன்றாகத்தான் இருக்கும். சின்ன படங்களுக்கு ஒரு நாள், பெரிய படங்களுக்கு மூன்றுநாள் என ஒரு படத்தின் தலையெழுத்தை முடிவுசெய்துவிட்டார்கள்.

‘பாட்ஷா’ படத்தின் 175வது நாள் வெள்ளிவிழா ஷீல்டை என் தந்தையுடன் சூப்பர் ஸ்டார் ரஜினி கையால் நான் பெற்றுக்கொண்டபோது எவ்வளவு பெருமிதமாக இருந்தது தெரியுமா…? ஆனால் இன்றைக்கு ஒரு படம் 25 நாள் ஓடினாலே அது வெள்ளிவிழா என்கிற மாதிரி நிலைமை மாறிவிட்டது.. மக்கள் ஒன்றைவிட, இன்னொன்றை பெட்டராக எதிர்பார்க்கிறார்கள்.. இதற்குள்ளாக நாம் எப்படி சூத்தரதாரியாக இருந்து வெற்றியை பெறுகிறோம் என்பதுதான் சவாலே..

வெற்றிக்கோ, தோல்விக்கோ நம்மைச்சுற்றி நான்கு பேர் காரணமாக இருப்பார்கள்.. நானும் அப்படிப்பட்ட நான்கு பேர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன். இந்த சவால்களை சந்தித்து மீண்டு(ம்) வருவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்கிறார் சற்றும் தன்னம்பிக்கை குறையாத அரீஷ் குமார்.

Comments are closed.