விஷால் அதிரடி ; வழிக்குவந்த தியேட்டர் உரிமையாளர்கள்..!

242

vishal 2

வழக்கமாக விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தவிர அதிகப்படியாக விதித்துள்ள நகராட்சி வரியை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பிடிவாதம் காட்டிய அரசு, கொஞ்சம் இறங்கி வந்து நகராட்சி வரி 1௦ சதவீதத்தை, 8 சதவீதமாக குறைத்து கருணை காட்டியுள்ளது..

தயாரிப்பளர்களை பொறுத்தவரை ரசிகர்கள், பொதுமக்கள் தியேட்டருக்கு அதிக அளவில் வரவேண்டும்.. அப்படி வந்தால் தான் லாபம்..ஏற்கனவே திகட் கட்டணம் அதிகம்.. தற்போது வேறு டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. அப்படி உயர்த்திய தொகைக்கும் சேர்த்து ஜி.எஸ்.டி மற்றும் நகராட்சி விரிவிதிக்கப்பட்டால் டிக்கெட் விலை 200ஐ தாண்டும். இதனால் மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வர யோசிப்பார்கள்.. இதனை கருத்திற்கொண்டு விஷால் தலைமயிலான தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாய் சில விதிமுறைகளை தியேட்டர்களுக்கு விதித்துள்ளது.

அவை வருமாறு ;

இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது: இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்

கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்

அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்

தண்ணீர் கொண்டுவர மக்களை அனுமதிக்கவேண்டும்

பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது

விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்

மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இன்று அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை வைக்கப்பட உள்ளது

இதற்கும் எதிர்ப்பு காட்டினால் தங்களது சுயநலம் வெளிப்பட்டுவிடுமோ என நினைத்த தியேட்டர்கள் சங்கத்தினர் இந்த விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டாலும் பார்க்கிங் மற்றும் ஆன்லைன் கட்டணம் குறைப்பது குறித்து நாளை கூடி முடிவெடுத்தபின் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

Comments are closed.