ஷங்கரின் உதவியாளர் நடத்திய பிரமாண்ட ‘யாகம்’..!

218

yagam

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் நரசிம்மா.. இவர் தற்போது ‘யாகம்’ என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அறிமுக நாயகனாக ஆகாஷ்குமார் நடித்துள்ளார்..

அதுமட்டுமல்ல எம்.பியும் சீனியர் நடிகையுமான ஜெயப்ரதா மற்றும் நெப்போலியன், நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட ஒரு நட்சத்திர கூட்டமே இதில் நடித்துள்ளனர். இந்தப்படம் கடவுள் நம்பிக்கை கொண்ட கிராமம் ஒன்றை தீயசக்திகள் தாக்குவது போலவும், அதில் நாயகன் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பித்து தன்னையும் தன் கிராமத்தையும் காப்பது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.