ஆக்சன் கிங் அர்ஜூன், நீண்ட நாளைக்குப்பிறகு எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் ‘சொல்லிவிடவா. தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்தப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகியாக நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறார் அர்ஜூன்.
தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யாக்கு ஜோடியாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார். ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் படமாக்கி இருக்கிறாராம் அர்ஜூன்.
ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், கதையின் தேவைகேற்ப பெரும் நட்சத்திரங்களான சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் தங்களது இயல்பானப் பங்களிப்பின் மூலம் கதைக்கு வலுசேர்க்கிறார்கள். பரபரப்பான காட்சிகளுக்கிடையே “நான் கடவுள்” ராஜேந்திரன், சதீஷ், மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை விருந்தும ரசிகர்களுக்காக காத்திருக்கிறதாம்.

Comments are closed.