கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பிரேமம் படம் தமிழில் ரீமேக்காகாவிட்டாலும் கூட தமிழ் ரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்போது அதே கூட்டணியில் வரும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக நிவின்பாலி நடித்துள்ள ‘ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள’ என்கிற படம் ரிலீசாக இருக்கிறது.
இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அல்தாப் சலீம்.. இவர் வேறு யாருமல்ல.. ‘பிரேமம்’ படத்தில் நிவின்பாலியுடன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர் தான். இவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனிடம் உதவி இயக்குனராக கொஞ்சமே கொஞ்ச நாள் மட்டும் வேலைபார்த்தவர்.. அதுமட்டுமல்ல நிவின் பாலியின் நெருங்கிய நண்பரும் கூட.
அதனால் இந்தப்படத்தில் அவரை இயக்குனராக மாற்றி அந்தப்படத்தை தானே தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார் நிவின்பாலி. அதுமட்டுமல்ல, பிரேமம் படத்தில் அறிமுகமான ‘ஷராபுதீன், கிருஷ்ண சங்கர், ஷிஜூ வில்சன் ஆகியோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஆஹானா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் செப்-1ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.

Comments are closed.