
தமிழர்களுக்கான அடையாளங்களுள் அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலும் ஒன்று. கிட்டத்தட்ட 2500 பக்கங்களுக்கு மேல் அடங்கிய இந்த நாவலை நான்கு, ஐந்து முறை வாசித்தவர்கள் எண்ணிக்கையே லட்சங்களை தாண்டும்.
இந்த நாவலை படமாக்க இயக்குனர் மணிரத்னமே முயற்சி எடுத்து சில காரணங்களால் அதை ஒத்தி வைத்துவிட்டார். இப்போது இந்த நாவலை இரண்டரை மணி நேரம் ஓடும் 2டி அனிமேஷன் படமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் வளமான தமிழகம் அமைப்பை சேர்ந்த சரவண ராஜாவும் அனிமேஷன் இயக்குனரான கார்த்திகேயனும்..
சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்த அனிமேஷன் படத்தை வரும் 2017 ஜனவரியில் வெளியிடும் வகையில் இரண்டு வருட தயாரிப்பாக உருவாக்குகிறார்கள். ஏற்கனவே பல ஹாலிவுட் அனிமேஷன் படங்களுக்கு பணிபுரிந்த தனது 20 வருட அனுபவத்தை வைத்து இதை உருவாக்க இருக்கிறார் இயக்குனர் மு.கார்த்திகேயன்.
Comments are closed.