‘24’ படத்திற்கு U’ சான்றிதழ் : மே-6ல் ரிலீஸ்..

178

Athreya-Run-Game

சூர்யா, சமந்தா நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சயன்ஸ் பிக்சன் படமாக ‘24’ உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, அதை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வெளியிடுகிறது..

படங்களை புரமோட் பண்ணும் உத்திகளில் ஒன்றுதான், அந்தப்படத்தின் கருவை மையப்படுத்தி ஆண்ட்ராய்டு கேமை வடிமைத்து அதை வெளியிடுவது. இதற்கு முன் துப்பாக்கி, ஜில்லா, அஞ்சான் என திரைப்படங்களை மையமாகக் கொண்ட ஆண்ட்ராய்டு கேம்கள் வெளியானது குறிப்பிடத்தது. தற்போது மீண்டும் சூர்யாவின் ‘24’ படத்தை புரமோட் பண்ணும் விதமாக ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

ஆத்ரேயாரன் எனப்படும் இந்த கேம் முழுக்க முழுக்க கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ டிசைனில் தப்பிக்கும் சூர்யா என்னும் ஒன் லைனுடன் உருவாகியுள்ளது. மே-1ஆம் தேதி முதல் இதை இணையத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். சிறுவர்களையும் இளைஞர்களையும் இந்த கேம் ரொம்பவே கவரும் என்பதில் ஐயமில்லை.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தணிக்கை குழுவினரின் பார்வைக்கு இந்தப்படம் அனுப்பப்பட்டது.. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் மே-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.

Comments are closed.