இனி வருடத்திற்கு ஒரு படம் தருவது என்பது இயக்குனர் பாலா ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவுதான். அவரது அடுத்த படத்தில் சசிகுமார் தான் ஹீரோ என்றும் செய்திகள் அடிபட்டு வந்தன. அது இப்போது உண்மையும் ஆகிவிட்டது.
சசிகுமார் ‘பிரம்மன்’ படத்தை முடித்துவிட்டு வருவதற்காக காத்திருந்த பாலா அதற்குள் தனது ஸ்கிரிப்டை மேலும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கிறார். கூடவே இசைஞானி இளையராஜாவுடன் உட்கார்ந்து 12 பாடல்களையும் 6 நாட்களில் தயார் செய்து வைத்துவிட்டார்.
படத்தை ‘கம்பெனி புரடக்ஷன்’ சார்பில் சசிகுமாரும், பாலாவின் ‘பீ ஸ்டுடியோசும்’ இனைந்து தயாரிக்கிறார்கள். வரும் மார்ச்-1 ஆம் தேதி படத்தை ஆரம்பிக்க இருக்கிறார் பாலா. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.