விஷாலின் புதிய படத்தில் நடிக்கும் பிரபு

341

vishal-prabhu
அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே தாமிரபரணி, ஆம்பள படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் – பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இணைந்து நடித்து வருகின்றனர். இதில் பிரபு சிறிது இளைத்து காணப்படுகிறார்.

விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படத்தை நடிகர்கள் ரமணா – நந்தா இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள்.

ஏ.வினோத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Comments are closed.