புதுயுகம்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய மர்ம தொடர் ’சொர்ணரகசியம்’. ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணி முதல் 7.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.
காவல் தெய்வங்கள் நடமாட்டம் இருக்கும் ஊர்தான் சொர்ணபுரி. பல சம்பிரதாயங்கள் நிறைந்திருக்கும் இந்த சொர்ணபுரியின் சித்த ரகசியத்தை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் மிக கடினம். சொர்ணபுரியில் புதைந்திருக்கும் சொர்ணபுதையலை தேடி பலர் வந்ததுண்டு ஆனால் அவர்களுக்கு பேராசை மட்டும் இருந்து நல்ல எண்ணம் இல்லாதால் திக்குதடுமாறி அலறி பைத்தியம் பிடித்து பாவிகளாக பல சமயங்களில் உயிரை விட்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சொர்ணபுரியில் மறைந்திருக்கும் சித்த ரகசியத்தை தேடி வரும் சிலருக்கு நடக்கும் அமானுஷ்ய விடயங்கள் புதிராய் எதார்த்தமான கதைப்பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் தொடர் தான் இந்த ‘சொர்ணரகசியம்’.
Comments are closed.