சூர்யாவை மெர்சலாக்கிய யுவன்சங்கர் ராஜா..!

184

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘மாஸ்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. படத்தை மேமாதம் ரிலீஸ் பண்ணிவிடலாம் என்கிற வேகத்தில் வேலைகள் நடைபெற்றாலும் இன்னும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் படத்தின் இசைவெளியீட்டு விழாவை மேமாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அஞ்சான் படத்தில் சூர்யாவை பாடவைத்து புது ஏரியாவுக்குள் அழைத்துச்சென்ற யுவன்சங்கர் ராஜா இந்தப்படத்திலும் இசையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறாராம். குறிப்பாக ‘பிறவி’ என்கிற பாடலும் அதற்கான யுவனின் தீமையும் “ப்ப்பா.. சான்ஸே இல்லை” என சிலாகித்திருக்கிறார் சூர்யா.

Comments are closed.