
‘பயம் ‘ என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘யாமிருக்க பயமே’. கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடித்துள்ள இந்தப்படத்தை கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த டீகே என்பவர்தான் இயக்கியுள்ளார்.
பொதுவாக ஜூன்-6ஆம் தேதி என்பது பயத்துக்கும் திகிலுக்கும் தொடர்புள்ள நாளாகத்தான் கருதப்படுகிறது.. ’ஓமன்’ என்கிற ஹாலிவுட் படம் கூட இந்த கருத்தை மையப்படுத்திதான் எடுக்கப்பட்டிருந்தது. அதனால் த்ரில்லராக தயாராகியுள்ள ‘யாமிருக்க பயமே’ படத்தையும் ஜூன்-6ஆம் தேதி ரிலீஸ் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் என முதலில் முடிவு செய்திருந்தார்கள்
ஆனால் தற்போது பட்த்தை ரிலீஸ் செய்ய சாதகமான சூழல் நிலவுவதால் கொஞ்சம் முன்னதாக நாளையே(ஏப்-9) ரிலீஸ் செய்கிறார்கள். விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் என
வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின், தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.