‘எமன்’ இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல்ராஜா சபதம்..!

291

gnanavelraja 1

இன்றைய சூழலில் திரையுலகினருக்கு மிகப்பெரிய நட்டத்தை ஏற்படுத்தி, சவாலாக இருப்பது படம் வெளியான் அன்றே ஆன்லைனில் படம் திருட்டுத்தனமாக லீக் ஆகும் விஷயம் தான். இதற்கு சைபர் க்ரைம் மூலமாக என்னென்னவோ நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வந்தாலும் கூட இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் என்கிற இணையதளம் தான் தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‘எமன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டுடியோகிரீன் நிறுவன தயாரிப்பளார் ஞானவேல்ராஜா இன்னும் ஆறுமாத காலத்தில் இந்த தமிழ்ராக்கர்ஸ் கும்பலை பிடித்து சிறையில் அடைப்பதாக சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “நேற்று வெளியான போகன் படத்தை பேஸ்புக்கில் எவனோ ஒருத்தன் திருட்டுத்தனமாக வெளியிட்டிருக்கிறான்.. அதை இரண்டரை லட்சம் பேர் வரை பார்த்து ஷேர் செய்திருக்கிறார்கள்.. எங்களது சி-3’ படத்தை ரிலீஸ் நாளன்று காலை 11 மணிக்கே இணையத்தில் லைவாக வெளியிடுவதாக தமிழ்ராக்கர்ஸ் என்கிற இணையதளக்காரன் சவால் விட்டிருக்கிறேன்.. நான் சொல்கிறேன்.. இன்னும் ஆறுமாத காலத்தில் இந்த தமிழ்ராக்கர்ஸ் கும்பலை உள்ளே தள்ளி உட்கார வைக்கிறேன் பாருங்கள்” என கொஞ்சம் கோபத்துடனேயே பேசினார் ஞானவேல்ராஜா.

Comments are closed.