கதை எழுதுகிறார் கலாப ‘காதலி’..!

226

ஆர்யா நடித்த ‘கலாபக்காதலன்’ படத்தை அடிக்கடி கே.டிவியில் போடுவார்கள்.. அந்தப்படத்திற்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.. அதில் ஆர்யாவின் மனைவியாக நடித்த ரேணுகா மேனனை விட, அவரது மச்சினியாக நடித்து வில்லித்தனம் காட்டிய அக்சயா தான் அதிகம் பேரை கவர்ந்தவர். அவரது டார்ச்சரில் ஆர்யா மட்டுமல்ல, நாமும் கூட மிரள்வோம்.

அந்த அக்சயா தான் இப்போது ‘யாளி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார். தயாரிப்பாளராகும் தைரியம் அவருக்கு எப்படி வந்தது..? நல்ல கதை தான் காரணமாம்.. உடனே கதை யாரென தேடவேண்டாம். அக்சயாவே தான் படத்தின் கதையையும் எழுதியுள்ளார்.

டான்ஸ் மாஸ்டராக இருந்து இயக்குனராக புரமோஷன் வாங்கிய காதல் கந்தாஸ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இதில் என்ன பியூட்டி என்றால் படத்தின் முழுப்படப்பிடிப்பும் மலேசியாவில் தான் நடைபெற இருக்கிறது. கோலாலம்பூர், பினாங்கு, மலாக்கா, லங்காவி ஆகிய பகுதிகளில் வரும் 27ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி ஓரே ஷெட்யூலில் முடித்துவிட்டு வருகிற மாதிரி திட்டமிட்டுள்ளாராம் அக்சயா.

Comments are closed.