கஸ்தூரிராஜா தயக்கம் காட்டுவது ஏன்.?

116

தனுஷின் தந்தை என்று இன்றைய தலைமுறை ரசிகர்களால் அறியப்படும் இதற்கு முந்தைய தலைமுறையினரை பொறுத்தவரை மிகப்பெரிய இயக்குனர். கிராமத்து மணம் கமழும் படங்களை தந்தவர். அவருக்கே தமிழ் தமிழ் சினிமாவில் முதன் முதலாக இயக்குனராக பாராட்டு வாங்கி தந்த படம் தான் ‘என் ராசாவின் மனசிலே’.

ராஜ்கிரணையும் மீனாவையும், அவ்வளவு ஏன் நமது வைகைப்புயல் வடிவேலுவையும் தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது இந்தப்படம் தான். சில இயக்குனர்கள் தங்களது வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஆர்வம் காட்டும் சூழ்நிலையில் கஸ்தூரி ராஜாவுக்கும் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றியதில் ஆச்சர்யம் இல்லை.

ஆனால் தயக்கமும் இருக்கவே செய்கிறது. இந்த 25 வருடங்களில் தமிழ்சினிமா ரொம்பவே மாறிப்போயிருக்கிறது. இந்த காலகட்டத்தில் ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகம் எடுத்தால் அதற்கு வரவேற்பு இருக்குமா என்கிற தயக்கம் தான் அது. இந்த இரண்டாம் பாக்க விஷயத்தில் ராஜ்கிரணும் ஊக்கம் கொடுக்கவே செய்திருக்கிறார். இருந்தாலும் இது இன்னும் டிஸ்கஷன் லெவலில் தான் இருக்கிறதாம்.

Comments are closed.