கமல் படத்திற்கு டைட்டில் வைக்கப்போகும் வி.ஐ.பி.யார்..?

219

kamal - illaiyaraja

கடந்த வருடம் கமல் தனது படங்களை சீரான இடைவெளியில் வெளியிட்ட வேகம் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. ஆனால் கடந்த தீபாவாளியில் வெளியான ‘தூங்கவனம்’ படத்திற்குப்பின் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதும் இன்னொரு விதமான ஆச்சர்யம் தான்.

ஆனால் தனது இந்த இடைவேளைக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக வரும் ஏப்-29 அன்று தனது புதிய படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். கமல். கமலின் ‘சாணக்யன்’ படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கமலுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.. இந்தப்படத்திற்கு டைட்டில் வைக்கப்போவது கமலின் ஆத்மார்த்த நண்பரான இசைஞானி இளையராஜா தான் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆக வித்தியாசமான ஒரு டைட்டிலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்..

Comments are closed.