மீண்டும் தனது ‘விசுவாசத்தை’ காட்ட தயாராகும் சிவா.!

190

visuvasam pooja

அஜித்-சிவா கூட்டணி பிற்காலத்தில் ரஜினிகாந்த்-எஸ்.பி,முத்துராமன் கூட்டணி போல இன்னொரு சாதனைக்கு தயாராகி வருகிறதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. பின்னே இயக்குனர் சிவா தொடர்ந்து அஜித்தை வைத்தே படங்களை இயக்கிவருவதை பார்த்தால் வேறு என்ன நினைக்க தோன்றும்..?

வீரம், வேதாளம், விவேகம், என கமர்ஷியல் வெற்றிப்படங்களை கொடுத்த சிவா-அஜித் கூட்டணி நான்காவது முறையாக ‘விசுவாசம்’ படத்திற்காக இணைந்துள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி நிறுவனம் இந்தப்படத்தை பூஜையுடன் துவங்கியுள்ளது.

சிவாவின் விசுவாசமான கடின உழைப்புக்கு அஜித் தொடர்ந்து பரிசு தந்து வருகிறார் என சொன்னால் மிகச்சரியாக இருக்கும்.

Comments are closed.