விஷ்ணு பட ஷூட்டிங் இன்று துவங்கியது…!

128

vishnu-3rd-production

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தயாரித்து நடித்த விஷ்ணு, அதை தொடர்ந்து ‘கதாநாயகன்’ என்கிற படத்தையும் தயாரித்து நடிக்கிறார்.. குறிப்பாக அனைத்துத்தரப்பு ரசிகர்களும் வந்து பார்க்கும் வகையிலான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார் விஷ்ணு. அந்தவகையில் ‘முண்டாசுப்பட்டி’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராம்குமார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.

இதை தொடர்ந்து மூன்றாவது படமொன்றையும் விஷ்ணுவே தயாரிக்கிறார். இந்தப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப்படத்தை இயக்குனர் எழிலிடம் இணை இயக்குனராக பணியாற்றிய செல்லா அய்யாவு என்பவர் இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார்

Comments are closed.