விஷ்ணுவை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ‘ஓட’வைத்த ஆர்யா..!

224

ஆர்யா கூட சேர்ந்து பழகுபவர்களுக்கு அவரது பிட்னெஸ் ஜூரமும் சேர்ந்து தொற்றிக்கொள்ளும்போல தான் தெரிகிறது. சென்னை ஈ.சி.ஆர் சாலையில் ‘மீகாமன்’ படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 50 கி.மீ தூரம் ஆர்யா தினசரி சைக்கிளில் தான் போய்வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதன்பின் சமீபத்தில் ஸ்வீடனில் நடந்த சிக்கில் ரேஸில் கலந்துகொண்டு பதக்கத்தையும் தட்டிவந்தார். இப்போது விஷ்ணுவும் கிட்டத்தட்ட ஆர்யாவின் பாணியை பின்பற்ற ஆரம்பித்துள்ளார். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் இவரது செலக்சன் சைக்கிளிங் அல்ல.. ரன்னிங்.

தற்போது ‘சகுனி’ இயக்குனர் சங்கர் தால் டைரக்சனில் வீரதீர சூரன் படத்தில் நடித்துவரும் விஷ்ணு, அதிகாலையில் எழுந்து ஷூட்டிங்ஸ்பாட் இருக்கும் பகுதிக்கு தினசரி முக்கால் மணி நேரம் ரன்னிங்கிலேயே வந்து ஆஜராகி விடுகிறாராம்.

Comments are closed.