நேற்று முன் தினம் காலமான இயக்குனர் சுபாஷுக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்றில்லாமல், ஒரு ஆத்மார்த்தமான மனிதனாக தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார் விஷால்.. அதற்கு காரணமும் இருக்கிறது.. விஷால் நடிகனாவதற்கு முன்பு, “நீ சினிமாவில் தாராளமாக நடிக்கலாமே” என உற்சாகப்படுத்திய முதல் ஆள் இயக்குனர் சுபாஷ் தானாம்.
ஆனால் சுபாஷின் டைரக்சனிலோ அல்லது அவரது கதையிலோ நடிக்கமுடியாத வருத்தம் விஷாலுக்கு நீண்டநாளாகவே இருந்தது. அதை தீர்க்கும் விதமாகத்தான் பிரபுதேவா டைரக்சனில் கார்த்தியும் விஷாலும் இணைந்து நடிக்கும் விதமாக ‘கருப்புராஜா வெள்ளைராஜா” என்கிற படத்திற்கு கதையை எழுதிக்கொடுத்துள்ளார் சுபாஷ்.. ஆக விஷாலின் மனக்குறையை போக்கிவிட்டே, தனது இறுதி யாத்திரைக்கு கிளம்பியிருக்கிறார் சுபாஷ்.
Comments are closed.