“பைரசியை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்..?”; விஷால் ஸ்ட்ரைக் பிளான்..!

252

vishal strike
ஆன்லைன் பைரசி மற்றும் திருட்டு விசிடிக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார் விஷால்.. தான் பேசும் கூட்டங்கள் தோறும் பைரசிக்கான எதிர்ப்பை தொடர்ந்து அழுத்தமாக பதிய வைத்தும் வருகிறார்.. இதற்கிடையே திருட்டு விசிடி புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சட்டவிரோத இணையதளங்கள் மூலம் படங்கள் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மீண்டும் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்காவிடில் வரும் ஏப்-30 முதல் திரையுலகம் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் எனவும் அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

Comments are closed.