இளம் முன்னணி நடிகர்கள் அனைவரும் ரஜினி நடித்த படங்களை வைப்பதுதான் வாடிக்கையாகிவிட்டதே.. என்ன ஒன்று.. அந்தப்படம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பிரச்சனை எதுவும் வராமல் செட்டில் செய்துகொண்டால் சரிதான்.. அந்தவகையில் ‘நான் சிகப்பு மனிதன்’ என ரஜினி பட டைட்டிலை பயன்படுத்திய விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் தான் நடித்துவரும் படத்திற்கு ‘பாயும் புலி’ என ரஜினி பட டைட்டிலை வைத்து மீண்டும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
சரியாக 32 வருடங்களுக்கு முன் ஏவி.எம் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான பாயும்புலி படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். சுசீந்திரன் இயக்கும் இந்த லேட்டஸ்ட் ‘பாயும் புலி’யில் விஷால் போள்ஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். வேந்தர் மூவிஸ் மதன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
Comments are closed.