வெற்றிகரமாக பூசணிக்காய் உடைத்தார் ‘மருது’..!

210

marudhu
‘கதகளி’ படத்தை தொடர்ந்து விஷால் தற்போது நடித்துவரும் படம் மருது. கொம்பன் முத்தியா இயக்கிவரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கியமான கேரக்டரில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.

நேற்று வெற்றிகரமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து பூசணிக்காயையும் உடைத்துள்ளனர் படக்குழுவினர்.. கிராமத்து பின்னணியில் உருவான ‘பாண்டியநாடு’ படம் போல இந்தப்படமும் தனக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் என நம்புகிறார் விஷால்.

Comments are closed.