அதிர்ச்சி தந்த விஷாலின் மகளிர் தின பேச்சு..!

202

vishal 1
மகளிர் தினத்தன்று ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற ‘தன்னம்பிக்கை பெண்கள் இன்று நாளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் விஷால். ஆரம்பத்தில் அவர் பேச்சை கேட்டதுமே அங்கிருந்த பெண்கள் அனைவரும் முதலில் அதிர்ச்சியானார்கள்.. அப்படி என்னதான் பேசினார் விஷால்..?

“வாழ்க்கையில் எனது ஒரு மணி நேரத்தை இன்று இங்கே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, வீணடித்துவிட்டேன். நீங்கள் பேசிய விஷயங்களை பார்க்கும்போது இதெல்லாமே ஏதோ கட்டாயத்தின் பேரில் படித்து முடித்து இப்படி செய்வேன், இப்படியெல்லாம் சாதிப்பேன் என்று சொல்வதெல்லாம் என்னால் நம்ப முடியாது, நான் இங்கே இதை சொல்லணும்னு முடிவு பண்ணித்தான் இவ்ளோ நேரம் இங்கே இருந்தேன், சொல்லிட்டேன். அவ்ளோதான். நான் என் கண்ணால பார்த்தது, உங்களால் சத்தியமா சாதிக்கமுடியாது.”

இப்படி பேசினால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது.. ஆனால்,. ஒரு சில நொடிகள் மெளனத்திற்குப் பிறகு “இந்த விஷால் இல்லை, எந்த கொம்பன் சொன்னாலும் நம்பாதீங்க.. எப்பவுமே உங்களுடைய தன்னம்பிக்கையை தளரவிடாதீங்க. அதுக்காகத்தான் இப்படி சொன்னேன்” என சொன்னாரே பார்க்கலாம்.. அதன்பின்னர்தான் அங்கிருந்தவர்களின் முகத்தில் சந்தோஷப்புன்னகை மீண்டும் திரும்பியது.

விழாவில் பேசிய அவர் இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படப்பிடிப்பில் திருநங்கையாக நடித்தபோது தனக்கு கிடைத்த அனுபவத்தை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகளுடன் பகிர்ந்து கொண்டார்.

“புதுமுக நாயகி ஒருவருக்கு திரையில் கிளாமராக (சில இயக்குநர்களால்) நடித்தபோது, தன் குடும்பம் இதைப் பார்க்குமே என்ற பதைபதைப்புடன் இருந்திருக்கும். அந்த மனநிலையை ஒத்திருந்தது. என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத அனுபவம், அவன் இவன் படத்தில் 17 நாள் பெண்ணாக நான் இருந்தது. அந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தை படப்பிடிப்பு முடிந்த பிறகும் என்னுடைய அம்மா உணர்ந்தார்கள். என்னுடைய வெற்றிக்கு மட்டுமில்லை, என்னால் இயன்றவரை நான் செய்யும் அனைத்து நல்ல செயல்களும்கும் காரணம் என் அம்மா தான்” என முத்தாய்ப்பாக முடித்தார் விஷால்.

Comments are closed.