விஷாலுக்கு பாட்டி (செய்த) வைத்தியம்..!

238

vishal injured
‘கொம்பன்’ முத்தையா இயக்கிவரும் ‘மருது’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் விஷால்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தென் மாவட்டங்களில் தான் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி தேனி சுற்றுவட்டாரத்தில் படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்த சண்டைக்காட்சியில் நடித்தபோது விஷாலுக்கு எதிர்பாராதவிதமாக காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.. இதற்காக விஷால் மருத்துவமனைக்கெல்லாம் போகவில்லை.. அங்கே கிராமத்தில் இருந்த ஒரு பாட்டியே விஷாலின் காயத்திற்கு மருந்துபோட்டு வைத்தியம் செய்துவிட, அதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் விஷால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

Comments are closed.