பழம்பெரும் பாடகிக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்..!

208

சொல்வது மட்டுமல்ல, சொன்னபடியே பல விஷயங்களை செய்துகாட்டுவதில் முனைப்பாக இருக்கிறார் நடிகர்சங்க செயலாளரான விஷால். நலிந்த கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக அவர்களுக்கு மாதந்திர உதவித்தொகை பெற்றுத்தரும் விஷயத்தில் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

மருத்துவ சிகிச்சைக்காக பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவி செய்ததை தொடர்ந்து தான், அவருக்கு பலரும் உதவிசெய்ய முன்வந்தனர். அடுத்ததாக ‘ஆண்பாவம்’ படத்தில் நடித்த நாட்டுப்புற பாடகியான கொல்லங்குடி கருப்பாயி வறுமையில் வாடுகிறார் என்பதை அறிந்து அவருக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகைசெய்தார் விஷால்.

தற்போது பழம்பெரும் பாடகியான சரளாவும் அவரது இரண்டு மகள்களும் வருமானமின்றி வாடும் தகவல் விஷாலுக்கு தெரியவந்ததும் தேவி என்கிற அறக்கட்டளை மூலமாக அவருக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்க ஏற்பட்டு செய்துள்ளார்.. இன்றும் கூட விஷேச வீடு தோறும் ஒலிக்கும் ‘நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வளர்க’ என்கிற பாடலை பாடியவர் சாட்சாத் இந்த சரளாவே தான்.

Comments are closed.