ஜனாதிபதி விருதுபெற்றவர் ஹீரோவாக நடிக்கும் ‘விருத்தாசலம்’..!

215

viruthachalam
விருத்தாசலம் என்கிற படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

சூழ்நிலை காரணமாக சிறு வயதில் விருதகிரி செய்த குற்றத்திற்காக. பதினான்கு வருடம் சிறை தண்டனை அனுபவிக்கிறான். வெளியே வரும் அவன் இளமையை இழந்து பெற்ற தாயையும் இழந்து காதலியையும் இழக்க நேரிடுகிறது. ஆனாலும் நேர்மையாக வாழ வேண்டும் என்கிற கொள்கையை மட்டும் அவன் இழக்க வில்லை. அவனது நேர்மைக்கு கிடைத்த பரிசு என்ன என்பதுதான் இந்த படத்தின் வாழ்வியல் கதை!

கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தை ரத்தன்கணபதி என்பவர் இயக்கியுள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 7 ம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் ரத்தன்கணபதி.

Comments are closed.