ஜூலை-28ல் ‘வி.ஐ.பி-2’ ரிலீஸ் ; தனுஷ் அறிவிப்பு..!

190

vip 2 release

தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி’.. வேல்ராஜ் இயக்கிய அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘வி.ஐ.பி’ என்கிற பெயரில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த அமலாபால் தான் இதிலும் கதாநாயகி.. மோனல் கஜார் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார்.

ஆனால் இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பாலிவுட் நடிகை கஜோல் கதாநாயகனுக்கு இணையான முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ரிலீஸ் எப்போது என இன்று அறிவிப்பதாக தனுஷ் கூறவந்த நிலையில், ஜூலை-28ஆம் தேதி ‘வி.ஐ.பி-2’ ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தனுஷ்.

Comments are closed.