
ராஞ்சனா, மரியான் ஆகியவை தனுஷ் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக கவர்ந்தாலும் தனுஷின் வழக்கமான இந்த கமர்ஷியல் அதிரடியை பார்க்க, அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் ட்ரைலரிலேயே ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுள்ளார் தனுஷ்.
அந்தவகையில் தனுஷ், அமலாபால் என க்யூட் காம்பினேஷன்.. அதுதவிர படிக்காதவன், உத்தமபுத்திரன், மாப்பிள்ளையை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் காமெடி கூட்டணி அமைத்திருக்கின்றார் விவேக். இசைக்கு அனிருத், இயக்குனராக உருமாறியிருக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் முதல் படைப்பு என ஒரு கமர்ஷியல் கூட்டணியுடன் பக்காவாக தயாராகி இருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ .
இந்தப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர். படமும் வரும் ஜூலை-18ல் ரிலீஸ் ஆகிறது. இதே தேதியில்தான் மனோபாலா தயாரித்துள்ள ‘சதுரங்க வேட்டை’ திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.. ‘சதுரங்க வேட்டை’யை திருப்பதி பிரதர்ஸும் ‘வி.ஐ.பி’யை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதனும் வெளியிடுகிறார்கள்.
Comments are closed.