இமான் – ஜி.வி.பிரகாஷ் – அனிருத் ; ‘வில் அம்பு’க்காக மெகா கூட்டணி..!

203

கதாநாயகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடைசி வரை சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதைவிட, ஒருவரால் இன்னொருவருக்கு பிரச்சனை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்றால் அந்தக்கதை எவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும். அதைத்தான் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம் ‘வில் அம்பு’ படமாக இயக்கியுள்ளார்.

வழக்கு எண் ‘ஸ்ரீ, பொறியாளன் படத்தில் நடித்த ஹரீஷ் கல்யாண் கதாநாயகர்களாக நடிக்க, சாந்தினி, சிருஷ்டி டாங்கே, சமஸ்கிருதி என மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். முக்கியமான வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். கலையான சமையல் சாதம் படத்திற்கு இசையமைத்த நவீன் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கதையில் புதுமை ஒகே.. இசையில் ஏதாவது புதுமை பண்ணவேண்டாமா..? அதனால் தான் இமான்-ஜி.வி.பிரகாஷ்-அனிருத் என இன்றைக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும் மூன்று இசையமைப்பாளர்களை அழைத்து ‘வில் அம்பு’ படத்தில் பாடல்களை பாட வைத்துள்ளார்கள்.. படத்தின் புரமோஷனுக்கு இது நிச்சயம் பிளஸ் ஆக இருக்கும்.

Comments are closed.