எளிமையாக நடைபெற்ற ‘விக்ரம் வேதா’ இசை வெளியீடு..!

203

Vikram Vedha Audio Launch

‘ஓரம்போ’ படத்தின் மூலம் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக அடியெடுத்து வைத்த புஷ்கர்-காயத்ரி, மாதவன்-விஜய்சேதுபதி இருவரையும் இணைத்து இயக்கியுள்ள படம் தான் விக்ரம் வேதா’.. முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்தப்படத்தை தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதி சுற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

இந்தப்படத்தில் கதிர், வரலட்சுமி, ‘யு டர்ன்’ புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரேம், ‘ஆண்டவன் கட்டளை’ புகழ் ஹரீஷ் பெராடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டை சூர்யன் எப்.எம்மில் வைத்து எளிமையாக நடத்தி முடித்துள்ளனர் படக்குழுவினர்.

Comments are closed.