விக்ரம் பிரபு பாடலை வெளியிட்டார் அனிருத்..!

230

tharumaru - aniruth
‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக், விக்ரம் பிரபுவை வைத்து வீரசிவாஜி என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஷாமிலி கதாநாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து விக்ரம் பிரபுவுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துவரும் டி.இமான் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப்படத்திற்காக ‘டங்காமாரி’ புகழ் ரோகேஷ் வரிகளில் உருவான ‘தாறுமாறு’ என்று ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.

இந்தப்பாடலை யார் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைத்த படக்குழுவினர், சிம்புவின் நண்பரான அனிருத் தான் அதற்கு சரியான நபர் என முடிவுசெய்து அவரிடம் கோரிக்கை வைத்தார்கள்.. அவரும் உடனே அதற்கு ஒப்புக்கொண்டு நேற்று இந்தப்பாடலை வெளியிட்டார்.

Comments are closed.