மும்மொழிகளில் ‘ஐ’ பட டப்பிங் பிஸியில் விக்ரம்..!

77

உலகெங்கிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவேண்டும் என்கிற ஒரே காரணத்தால், தீபாவளிக்கு வருவது உறுதியில்லை என்றாலும் ‘ஐ’ படத்தின் வேலைகள் என்னவோ கன ஜோராகத்தான் நடந்து வருகின்றன. தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஷங்கரும் அவரது டீமும் பம்பரமாக சுழன்று வருகின்றன.

மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் விக்ரம் மூன்று வித தோற்றங்களில் நடிக்கிறார் என்பது தெரியும். அதேபோல லேட்டஸ்ட் தகவலாக தமிழ். தெலுங்கு, இந்தி என மாறி மாறி மூன்று மொழிகளிலும் விக்ரமே டப்பிங் பேசி வருகிறார். மூன்று வேடங்களில் மெனக்கெட்டு உடலை வருத்தி நடித்தவருக்கு மூன்று மொழிகளில் பேசுவதா பெரிய கஷ்டமாக இருந்துவிடப்போகிறது.

Comments are closed.