விஜய்சேதுபதி ரம்யா நம்பீசன் ஹாட்ரிக் கூட்டணி..!

173

ramya nambisan - vijaysethupathi

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் விஜய்சேதுபதியின் சினிமா கேரியரை இன்னும் ஒரு படி உயர்த்தியவர் இயக்குனர் பாலாஜி தரணிதரன். இவர் ஜெயராம் மகனை வைத்து இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படம் சென்சார் பிரச்சனையால் தாமதமாகி, விரைவில் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் விஜய்சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்கிற படத்தை இயக்கும் வேலையையும் ஆரம்பித்துவிட்டார் பாலாஜி தரணிதரன்.

சினிமா பின்னணியில் உருவாகும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு நடிகராக நடிக்கிறார்.. கதாநாயகிகளாக ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் ஆகியோர் நடிக்கின்றனர். பீட்சா, சேதுபதி படங்களையடுத்து இந்தப்படத்தின் மூலம் விஜய்சேதுபதி ரம்யா நம்பீசன் ஹாட்ரிக் கூட்டணி அமைத்துள்ளார்கள்.

இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் சீனியர்களான அர்ச்சனா, மௌலி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Comments are closed.