விஜய்சேதுபதிக்கு இந்த 2016ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்துவிட்டது.. அவர் நடித்துள்ள ‘புரியாத புதிர்’ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இது தவிர கே.வி.ஆனந்தின் ‘கவண்’ மற்றும் தியாகராஜன் குமாரராஜா, புஷ்கர்-காயத்ரி ஆகியோர் டைரக்சனில் தலா ஒரு படம் என பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் விஜய்சேதுபதி..
இந்தநிலையில் ‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் டைரக்சனில் ஒரு படம் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.. அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். பன்னீர்செல்வம் தனது சிஷ்யர் என்பதால், இந்த விழாவில் இயக்குனர் லிங்குசாமி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Comments are closed.