விஜய்சேதுபதி படத்தில் கதாநாயகியான சிரஞ்சீவி வீட்டுப்பெண்..!

219

gautam karthik - vijaysethupathi film

இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பது ஒன்றும் விஜய்சேதுபதிக்கு புதிதல்ல தான்.. ஆனால் கௌதம் கார்த்திக்கிற்கு நிச்சயம் புதிய அனுபவமாகத்தான் இருக்கும்.. விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் அப்படி ஒரு வாய்ப்பு அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும் படம் மூலமாக அவருக்கு கிடைத்துள்ளது.. இது அவரை அடுத்த தளத்திற்கு அழைத்து செல்லும் என உறுதியாக நம்பலாம்.

இந்தப்படத்தின் பூஜை மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.. இந்தப்பூஜையில் படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகும் நிகாரிகாவும் கலந்துகொண்டார். இந்த நிகாரிகா யார் தெரியுமா..? மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான நாகபாபுவின் மகள் தான்.. ஏற்கனவே தெலுங்கில் ‘ஒக்க மனசு’ என்கிற படத்தின் மூலம் நடிப்பில் அடியெடுத்து வைத்துவிட்ட நிகாரிகா, அடுத்து தனது இரண்டாவது படத்தில் பிடிவாதமாக தமிழுக்கு நடிக்க வந்துள்ளாராம்.

Comments are closed.