விஜய்யின் மகனை மயக்கிய டான்ஸ் மாஸ்டர்..!

191

siva rock sankar (1)

சமீபத்தில் வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் டான்ஸ் மாஸ்டர் தான் சிவா ராக் சங்கர்.. ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய கலை பயணத்தை துவங்கிய இவர் அந்தப்படத்தில் ‘சிலாக்கி டும்மா’ என்கிற பாடலுக்கு ‘டெத் குத்து’ என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

குறிப்பாக இந்த நடனம் விஜய்க்கும் அவருடைய மகனுக்கும் மிகவும் பிடிக்கும் என, சிவ ராக் சங்கரின் உதவி நடன இயக்குநரை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தபோது கூறினாராம் விஜய். “அது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு” எனும் சிவ ராக் சங்கர் விஜய், விஷால், தனுஷ் என நிறைய பேரின் பாடல்களுக்கு நடனம் அமைக்க வேண்டும் என்பது தான் ஆசை” என்கிறார்..

சினிமாவில் முதன் முதலில் முத்தின கத்திரிக்காய் படத்தில் இவருக்கு நடன இயக்குநராக வாய்ப்பு தந்தவர் இயக்குநர் சுந்தர்.சி அதை தொடர்ந்து மீசைய முறுக்கு படத்தில் அனைத்து பாடலுக்கும் நடனம் அமைக்க வாய்ப்பு தேடிவந்தது. ‘அடியே சக்கரக்கட்டி’ பாடலுக்கு மட்டும் தான் நடனம் அமைக்க சென்ற, இவரது நடனம் பிடித்துப்போனதால், இவரை ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைத்து பாடலுக்கும் நடனம் அமைக்கும் படி கூறிவிட்டாராம்

இதைத்தொடர்ந்து ரம்மி இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கும், இன்னும் சில படத்துக்கும் நடனம் அமைத்து வருகிறேன். ‘சிலாக்கி டும்மா’ பாடலில் ராக், ஜாஸ், கிளாசிக்கல் என்று அனைத்தையும் கலந்து புதிய நடன அசைவுகளை கொண்டு ஒரு நடனம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என்றார் மாஸ்டர் சிவ ராக் சங்கர்.​

Comments are closed.