‘தர்மதுரை’யை கௌரவப்படுத்திய தர்மதுரை..!

224

dhradurai 25th year
விஜய்சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே ரஜினி நடித்த படத்தின் டைட்டில் தான். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நெல்லை என தென்மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ரஜினி நடித்து 1991ல் பொங்கல் வெளியீடாக வெளியான ‘தர்மதுரை’ படம் வெளியாகி இந்த பொங்கலுடன் 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ரஜினிகாந்த் டைட்டிலை தங்களது படத்திற்கு வைத்திருப்பதால் அந்தப்படத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை தடபுடலாக கொண்டாடி ரஜினியையும் ‘தர்மதுரை’ படத்தையும் அந்தப்படத்தை இயக்கிய மறைந்த இயக்குனர் ராஜசேகரையும் கௌரவப்படுத்திவிட்டனர் இந்த தர்மதுரை படக்குழுவினர்.

Comments are closed.