தமிழ்சினிமாவின் முக்கியமான 5௦ படங்களில் ‘அண்ணாதுரை’ இடம்பிடிக்கும்

100

annadurai audio launch photo

தொடர் வெற்றிகளை குவித்துவரும் நாயகன் விஜய் ஆண்டனியின் அடுத்த ரிலீஸ் ‘அண்ணாதுரை’.. புதியவரான ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் டயானா சாம்பிகா, மஹிமா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி நிறுவத்துடன் ராதிகா சரத்குமார் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இதில் படத்தொகுப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

வரும் நவ-3௦ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்தவிழாவில் திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவரையும் தம்பதி சகிதமாக வரவேற்ற சரத்குமார்-ராதிகா இருவரும் தமிழின் முதல் நாவலான, வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ புத்தகத்தை பரிசளித்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய விஜய் ஆண்டனி, “ராதிகா மேடம் இல்லையென்றால் இன்று நான் இல்லை.. 15 வருடங்களுக்கு முன் அவர் தயாரித்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர் மூலம் எனக்கு வாய்ப்பளித்தார். இன்று அவருடன் சேர்ந்து படம் தயாரித்து, அந்தப்படத்தில் நாயகனாக நடித்து அவருடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

அதிலும் சரத்குமார் சார் தனக்கு வந்த கதையை எனக்கு பெருந்தன்மையுடன் திருப்பிவிட்டுள்ளார்.. அதற்கு அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. படத்தை இயக்கியுள்ள ஸ்ரீனிவாசனின் மனசு தான் இந்த அண்ணாதுரை கேரக்டர்.. இந்தப்படத்தை வாங்கி வெளியிடும் அலெக்சாண்டருக்கு வியாபார ரீதியாக நிச்சயம் நல்ல வரவேற்பை பெற்றுத்தரும்” என கூறினார் விஜய் ஆண்டனி.

படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் பேசும்போது, “தமிழ்சினிமாவின் முக்கியமான ஐம்பது படங்களை பட்டியலிட்டால் அதில் இந்த அண்ணாதுரையும் இடம்பிடிக்கும்” என ரத்தினச்சுருக்கமாக தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

அப்படியென்றால் படம் தான் பேசும் போல… ;

Comments are closed.