டிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர். அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘டிராபிக் ராமசாமி’.
இதில் கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள். கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப், ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்பட தொழில்நுட்பம் படித்துவிட்டு ஜந்தாண்டுகள் எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.