இரண்டு ஹீரோயின்கள் தேடும் வெற்றிவேல்..!

212

பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்து முடித்துவிட்ட சசிகுமார், கிட்டத்தட்ட ஒரு யாகம் நடத்தி முடித்தது போல ரிலீப் ஆகிவிட்டார். அடுத்ததாக புதியவர் வசந்தமணி இயக்கும் ‘வெற்றிவேல்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க தயாராகிவிட்டார் சசிகுமார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தான் நடக்க இருக்கிறது.

வழக்கமான சசிகுமார் பாணியிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் புதுமுகங்களாக தேர்வுசெய்ய இருக்கிறார்களாம். ‘தாரை தப்பட்டை’ படத்தில் நீளமான தலை முடியுடன் நடித்த சசிகுமார். இதில் தன்னுடைய நார்மல் கெட்டப்பிற்கு மாறுகிறார்.

Comments are closed.